குளவி கொட்டு: 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கான 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 17-10-2022 | 3:18 PM

Colombo (News 1st) வவுனியா - போகஸ்வெவ பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 40 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் பதவிய ஆகிய வைத்தியசாலைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் 02 மாணவர்களின் நிலை சற்று மோசமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.