T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(16) ஆரம்பம்

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(16) ஆரம்பம்

by Staff Writer 16-10-2022 | 7:06 AM
Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(16) அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றது. இன்று(16) ஆரம்பமாகும் தகுதிகாண் சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஸ்கொட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதவுள்ளன. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உள்நாட்டு ஔிபரப்பு உரிமத்தை கொண்டுள்ள சிரச TV, நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் ஔிபரப்பு சேவைகளை விஸ்தரித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிரச TV, சக்தி TV-உடன் இணைந்து ஔிபரப்பை விஸ்தரித்துள்ளது.