.webp)
Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் இன்று(16) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 111 ஓட்டங்களை பெற்றது.
112 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, ஒரு பந்து மீதமிருக்க போட்டியை வெற்றி கொண்டது.
இன்று(16) காலை நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் களமிறங்கின.
இதில் நமீபியா அணி 55 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உள்நாட்டு ஔிபரப்பு உரிமத்தைக் கொண்டுள்ள சிரச TV, நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் ஔிபரப்பு சேவைகளை விஸ்தரித்துள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிரச TV சக்தி TV-யுடன் இணைந்து ஔிபரப்பை விஸ்தரித்துள்ளது.