.webp)
Colombo (News 1st) நாவலப்பிட்டியில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்ட 15 பேரை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று(16) முற்பகல் நாவலப்பிட்டி நகரில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான எதனையும் கூற முடியாது என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளரும் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.