மழையுடனான வானிலை: நிவாரணம் வழங்குமாறு ஆலோசனை

தொடரும் மழையுடனான வானிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 16-10-2022 | 3:37 PM

Colombo (News 1st) அதிக மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.