தொடர்ந்தும் வெள்ள அபாயம்

களு, களனி கங்கை, அத்தனகலு ஓயாவில் தொடர்ந்தும் வெள்ள அபாயம்

by Staff Writer 16-10-2022 | 3:13 PM

Colombo (News 1st) களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவில் தொடர்ந்தும் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களத்தின் பணிப்பாளர் S.P.C.சுகீஸ்வர கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.