.webp)
Turkey: துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியின் வட பகுதியில் கருங்கடல் அருகே அமைந்துள்ள Bartin மாகாணத்தில் அம்சரா நகரில் அரசுக்கு சொந்தமான TTK Amasra Muessese Mudurlugu எனும் நிலக்கரி சுரங்கத்தில் இந்த வெடி விபத்து நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனால், இந்த விபத்தில் பலரும் சிக்கிக்கொண்டனர்.
மீட்புக் குழுவினர் 58 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சுரங்கத்தின் சுமார் 300 மீட்டர் ஆழத்தில் அவர்கள் சிக்குண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பணியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் மீட்புப் பணிகள் இடம்பெறும் இடத்தில் சூழ்ந்துள்ளனர்.
இதனிடையே, இந்த வெடி விபத்தில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக துருக்கியின் உள் விவகார அமைச்சர் Suleyman Soylu தெரிவித்துள்ளார்.