நாட்டின் வருடாந்த தனிநபர் முட்டை நுகர்வு 174; உற்பத்தி 34% வீழ்ச்சி

நாட்டின் வருடாந்த தனிநபர் முட்டை நுகர்வு 174; உற்பத்தி 34% வீழ்ச்சி

நாட்டின் வருடாந்த தனிநபர் முட்டை நுகர்வு 174; உற்பத்தி 34% வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

15 Oct, 2022 | 4:22 pm

Colombo (News 1st) நாட்டின் வருடாந்த தனிநபர் முட்டை நுகர்வு சுமார் 174 முட்டைகள் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருடாந்த முட்டை உற்பத்தி 1000 முதல் 2000 மில்லியனுக்கு இடைப்பட்டது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த பெரும்போகத்தில் இரசாயன உரங்கள் இல்லாத காரணத்தினால், இலங்கையில் சோளம் மற்றும் சோயா பயிர்ச்செய்கை முடங்கியிருந்ததால், முட்டை உற்பத்தி மற்றும் கோழி இறைச்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நாட்டில் முட்டை உற்பத்தி 164 மில்லியனாகவும் கோழி இறைச்சி உற்பத்தி 18 மெட்ரிக் தொன் வரையிலும் குறைவடைந்துள்ளது.

நாட்டில் 2021 ஆம் ஆண்டில் முட்டை உற்பத்தி 2,934 மில்லியனாக காணப்பட்டாலும், நடப்பாண்டில், கால்நடைத் தீவன பற்றாக்குறையால், முட்டை உற்பத்தி 34 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் கோழிக்குஞ்சுகளுக்கும் முட்டைக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்