வார இறுதியில் மின்வெட்டு நேரத்தை குறைக்க திட்டம்

வார இறுதியில் மின்வெட்டு நேரத்தை குறைக்க திட்டம்

by Bella Dalima 14-10-2022 | 4:25 PM

Colombo (News 1st) வார இறுதியில் மின்வெட்டு நேரத்தை குறைப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் நாட்களில் குறைந்த நேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான இயலுமை ஏற்பட்டுள்ளதாகவும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அ​மைச்சர் கூறியுள்ளார்.

 

CEB will reduce the power cuts during the weekend due to increase in hydro generation & low energy demand. If rain continues to the catchment areas, CEB will keep the power cuts to a minimum. However CEB will manage the water resources available for future power generation.

— Kanchana Wijesekera (@kanchana_wij) October 14, 2022