.webp)
Colombo (News 1st) வரக்காப்பொல - தும்பலியத்த, மாயிம்நொலுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தது.
இதன்போது, இடிபாடுகளில் சிக்கிய மூவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (14) பிற்பகல் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக கேகாலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் தாயும் ஆண் பிள்ளை ஒருவரும் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மகனின் நண்பரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக கேகாலை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த தந்தையை மீட்ட பாதுகாப்புத் தரப்பினரும் பிரதேசவாசிகளும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.