யாழ். அட்டகிரியில் கைக்குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - அட்டகிரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மீட்பு

by Bella Dalima 14-10-2022 | 3:51 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நவாலி, அட்டகிரி பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, மீட்கப்பட்ட கைக்குண்டுகள் இன்று முற்பகல் செயலிழக்க செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

அட்டகிரியில் கடந்த 11 ஆம் திகதி காணி துப்பரவு பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை கண்ட காணி உரிமையாளர் அது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.