வெலிபென்ன நுழைவாயில் வௌ்ளத்தில் மூழ்கியது

தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் வௌ்ளத்தில் மூழ்கியது

by Bella Dalima 14-10-2022 | 3:45 PM

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன நுழைவாயிலில் வாகனங்கள் பிரவேசிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

வெலிபென்ன நுழைவாயிலை அண்மித்த வீதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயிலில் இலகுரக வாகனங்கள் உட்பிரவேசிக்கவும் வௌியேறவும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகார சபை கூறியுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு அல்லது காலி நோக்கி பயணிக்கும் சாரதிகள்  குருந்து கஹ ஹதகம அல்லது தொடங்கொட நுழைவாயிலை பயன்படுத்த முடியும் என அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.