தென் மாகாணத்தில் 2 விசேட குற்றத்தடுப்பு பிரிவுகள்

தென் மாகாணத்தில் இரண்டு விசேட குற்றத்தடுப்பு பிரிவுகள் ஸ்தாபிப்பு

by Bella Dalima 14-10-2022 | 3:33 PM

Colombo (News 1st) குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தப்பிச்செல்ல இடமளிக்க முடியாது என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

விசேட குற்றத்தடுப்பு பிரிவை இன்று ஆரம்பித்து வைத்த போதே அவர் இதனை கூறினார்.

தென் மாகாணத்தில் இரண்டு விசேட குற்றத்தடுப்பு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

காலி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு என இந்த பிரிவுகள் இயங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு மிரிஸ்ஸயில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

புதிய பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளனர். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  துப்பாக்கி பிரயோகத்திற்கான விசேட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயர் தொழில்நுட்ப தொடர்பாடல் கட்டமைப்பு இந்த விசேட பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை இலகுவில் கைது செய்வதற்குரிய விசேட பயிற்சிகளும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி குற்றத்தடுப்பு பிரிவு அம்பலாங்கொடையில் மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.