உலக வங்கி பிரதிநிதியுடன் ஷெஹான் கலந்துரையாடல்

உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் உப தலைவருடன் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடல்

by Bella Dalima 14-10-2022 | 3:25 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின் பின்னர் உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் உப தலைவர் மார்ட்டின் ரெய்சரை (Martin Raiser) இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சந்தித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மாற்று வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்குள்ள இயலுமை குறித்து இந்த கலந்துரையாடலின் போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடனை திருப்பி செலுத்துவதற்கான இயலுமை அற்றுப்போயுள்ளமையால், மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியூடாக கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் வாய்பின்றிப் போயுள்ளது.

இதனால் நிவாரண கடனை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரணங்களை எதிர்பார்த்து செயற்படுவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.