.webp)
Colombo (News 1st) நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் , வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரியெல்ல, பெல்மடுல்ல, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, புலத்சிங்கள, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.