.webp)
India: இராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் பதிலளிக்க மத்திய அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர் டிவை சந்திராசூட் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த 8 வருடங்களாக நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் எவ்வித பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் சுப்ரமணியன் சுவாமி தரப்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், இந்த மனு தொடர்பில் பதிலளிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.