பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

மினுவாங்கொடை முக்கொலை: பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

by Staff Writer 12-10-2022 | 12:51 PM

Colombo (News 1st) மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் கடந்த 06ஆம் திகதி மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றம் 2 மகன்கள் கொலை செய்யப்பட்டனர். 

பொலிஸாரால் வௌியிடப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான விபரங்கள்: 
⭕ பெயர் :- ஜயகொட சஞ்ஜீவ தோன் சஞ்ஜீவ லக்மால் 
⭕ விலாசம் :- இலக்கம் - 10, மஹிந்தாராம வீதி, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை
⭕ அடையாள அட்டை இலக்கம் :- 833214292V
⭕ வயது :- 39 

சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், கம்பஹா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் 071 8591 608 எனும் இலக்கத்திற்கோ அல்லது மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071 8591 612 எனும் இலக்கத்திற்கோ அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி:-