மட்டக்களப்பில் அதிகளவில் தொழு​​​நோயாளர்கள் அடையாளம்

by Bella Dalima 12-10-2022 | 6:01 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தொழு​​​நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் N. தமிழ்வண்ணன் தெரிவித்தார். 

இலங்கையை பொருத்தமட்டில், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் மாதாந்தம் புதிதாக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் தோல் வைத்திய நிபுணர் N. தமிழ்வண்ணன் குறிப்பிட்டார். 

​இந்நோய் பொதுவாக தோலில் நிறம் குறைவடைந்த ஒரு படலமாக, உணர்ச்சியற்ற விதத்தில் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். 

நோய் அறிகுறிகள் தென்பட்டால், உரிய சிகிச்சைகளை விரைந்து பெற்றுக்கொள்வதன் மூலம் நோயைக் குணப்படுத்த முடியும் என அவர் கூறினார். 

மட்டக்களப்பில் அவ்வாறு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தோல் வைத்திய நிபுணர் N. தமிழ்வண்ணன் தெரிவித்தார்.