.webp)
Colombo (News 1st) கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை இன்று அழைத்திருந்தது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், முறைப்பாட்டாளர் தரப்பினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை மீண்டும் அழைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.