ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடப்படவுள்ளது

by Bella Dalima 12-10-2022 | 6:25 PM

Colombo (News 1st) உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

இதன் படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறும் ஒருவரிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.