பெரும்போகத்திற்கான நீர் 20 ஆம் திகதி முதல் விநியோகம்

பெரும்போகத்திற்கான நீர் 20 ஆம் திகதி முதல் விநியோகம்

பெரும்போகத்திற்கான நீர் 20 ஆம் திகதி முதல் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2022 | 9:39 am

Colombo (News 1st) பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான நீரை எதிர்வரும் 20ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மகாவலி H வலயத்திற்கு உட்பட்ட வெலிகந்தை, கிராந்துருகோட்டை மற்றும் கலாவாவி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நெவில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இதனைத் தவிர இராஜாங்கனை மற்றும் நாச்சதூவ குளங்களிலிருந்தும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

கலாவாவியில் தற்போது 85 வீதம் நீர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடவை பெரும்போகத்தில் 96,438 ஹெக்டேரில் நெற்செய்கை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நெவில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்