மீலாதுன் நபி தினம் இன்று(09)

மீலாதுன் நபி தினம் இன்று(09)

by Staff Writer 09-10-2022 | 3:33 PM

Colombo (News 1st) மனித சமூகத்திற்கு நேர்வழி காட்டிய இறுதி இறை தூதர் முஹம்மத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்(09).

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களின் மார்க்க போதகராக விளங்கிய முஹம்மத் நபி நாயகத்தின் உபதேசங்கள் முன்பை விட, இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையை போக்க உதவுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த மனிதப் பண்புகளுடன் பிறந்த அனைவரும் ஒருவரையொருவர் விலகிச் செல்ல முற்படுவதை தவிர்த்து நபி நாயகத்தின் போதனையை பின்பற்றி புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்கான கௌரவம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மனித சமூகத்தை போன்று ஏனைய அனைத்தினதும் பாதுகாப்பு, பயன்பாடு, மரியாதை மற்றும் நேர்மை பற்றிய முஹம்மத் நபி நாயகத்தின் கருத்துகள் உண்மையின் உருவகமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நபி நாயகத்தின் போதனைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஆன்மீக ரீதியில் மாத்திரமன்றி சமூக ரீதியாகவும் வெற்றிபெற முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.