.webp)
Colombo (News 1st) பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று(09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால், புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க, எதிர்வரும் 13ஆம் திகதி வரை புவனேக அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக செயற்படவுள்ளார்.