.webp)
Colombo (News 1st) நாவலப்பிட்டி - இங்குருஓய வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் வீதியில் வீழ்ந்திருந்த தம்பதியினர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்பதியினருடன் காணப்பட்ட முறுகல் நிலையே இந்த கொலைச் சம்பவத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.