.webp)
Colombo (News 1st) சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் இன்று(09) யாழ்.நகரில் திறந்து வைக்கப்பட்டன.
அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் யாழ்.மாநகர சபையால் யாழ்.மானிப்பாய் வீதி ஓட்டுமடம் சுற்றுவட்டப் பகுதியில் இந்த சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை சைவ மகா சபையினால் உருவாக்கப்பெற்ற சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ சிலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி M.றெமிடியசினால் திறந்து வைக்கப்பட்டது.