கைச்சாத்திடப்பட்டுள்ள 35 வர்த்தக ஒப்பந்தங்களை மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை

கைச்சாத்திடப்பட்டுள்ள 35 வர்த்தக ஒப்பந்தங்களை மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை

கைச்சாத்திடப்பட்டுள்ள 35 வர்த்தக ஒப்பந்தங்களை மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2022 | 3:20 pm

Colombo (News 1st) பல்வேறு நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுமார் 35 வர்த்தக உடன்படிக்கைகளை விரைவாக மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகம், நிதி அமைச்சு, மத்திய வங்கி, வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன இணைந்து இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சின் செயலாளர் S.T.கொடிகார தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டின் பின்னர் பெரும்பாலான வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் பல்வேறு காரணங்களால் முறிவடைந்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள வரிகளை விடுவித்து நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர்  S.T.கொடிகார தெரிவித்தார்.

இதன் கீழ் சிங்கப்பூருடனான தற்போதைய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேலும் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக செயலாளர் குறிப்பிட்டார்.

இதனைத் தவிர, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டும் தற்போது செயற்படாமல் உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் விரைவில் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளன.
   
இந்தோனேசியாவுடன் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்