.webp)
Colombo (News 1st) மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் பாவனையைக் கொண்ட வழிபாட்டுத் தலங்களில் அலகொன்றுக்கு 32 ரூபா அறவிடப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.