.webp)
Colombo (News 1st) இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 200 கிலோகிராம் ஹெரோயின் இந்திய கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி சுமார் 1200 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்ட ஈரான் மீன்பிடி கப்பலில் இருந்த 6 ஈரான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஹெரோயின் தொகை ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்தே ஈரான் மீன்பிடிக் கப்பலுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் இலங்கையில் அவற்றை விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீர் புகாத வண்ணம் அவை பொதியிடப்பட்டு இலங்கை படகொன்றில் ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கை படகிற்கு அவற்றை ஏற்றுவதற்காக இந்து சமுத்திரத்தில் குறித்த ஈரான் மீன்பிடிக் கப்பல் பயணித்துள்ளதுடன், இதன்போதே இந்திய கடற்படையினரால் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், போதைப்பொருளை இலங்கைக்கு ஏற்றிச்செல்வதற்காக பயணித்த இலங்கை கப்பலை அடையாளங்கண்டு அதனை இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.