தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது கண்டிக்கத்தக்கது

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காதது கண்டிக்கத்தக்கது: பழ.நெடுமாறன்

by Bella Dalima 08-10-2022 | 7:10 PM

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்தமை கண்டிக்கத்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நேற்று முன்தினம் (06) சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது  இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை கண்டித்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக  தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு கையாண்ட நடைமுறையையே பாரதிய ஜனதாக் கட்சி அரசும் பின்பற்றுவதாகவும், தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை தமிழர்களை இந்திய அரசு கைவிட்டுள்ளதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.