பெலாரஸை சேர்ந்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பெலாரஸை சேர்ந்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

by Bella Dalima 07-10-2022 | 5:14 PM

Colombo (News 1st) அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்தவருக்கு அறிவிக்கப்பட்டது.

ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு உதவியதற்காக பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் Ales Bialiatski-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
 
ஏற்கனவே இந்த ஆண்டிற்கான மருத்துவம், வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.