ஐக்கிய மக்கள் சக்தியால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

நாட்டை சரியான பாதையில் வழிநடத்த ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

by Bella Dalima 07-10-2022 | 4:26 PM

Colombo (News 1st) நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள்  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த பிரேரணைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மக்களின் கழுத்தை நெரித்து, அதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். 

அறைக்குள் இருந்துகொண்டு இந்த நெருக்கடிக்கான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். 

கிராமங்கள், நகரங்கள் மற்றும் மக்களின் வீடுகளுக்கு அரசாங்கம் சென்று ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.