நாட்டின் பணவீக்கம் குறைவடையும் சாத்தியம்

நாட்டின் பணவீக்கம் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

by Bella Dalima 07-10-2022 | 3:52 PM

Colombo (News 1st) தற்போதைய பணவீக்க நிலையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்கள் உள்ளிட்ட அந்நியச் செலாவணி வரவுகளில் முன்னேற்றம் உள்ளதாகவும் அவர் கூறினார். 

நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஆளுநர்  அந்நியச் செலாவணி பணப்புழக்கம் நேர்மறையான நிலையை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மாத இறுதியில் தற்போதைய நாட்டின் பணவீக்கம் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் மேலும் தெரிவித்தார்.