தேசிய சபை உப குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேசிய சபையின் உப குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

by Bella Dalima 07-10-2022 | 4:52 PM

Colombo (News 1st) தேசிய சபையால் நியமிக்கப்பட்ட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இரண்டாவது தடவையாக தேசிய சபை இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

தேசிய சபையின் முதலாவது கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, உப குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுத்தல், வழிநடத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் பொதுவான முன்னுரிமைகளை ஏற்படுத்துவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவற்குமான வேலைத்திட்டங்களுக்கான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும்  இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.