கொஸ்கம - அவிசாவளை ரயில் பாதை மூடப்படுகிறது

கொஸ்கம முதல் அவிசாவளை வரையான ரயில் பாதை தற்காலிகமாக மூடப்படுகிறது

by Bella Dalima 07-10-2022 | 3:32 PM

Colombo (News 1st) ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக இன்றிரவு 8.30 முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை களனிவௌி மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, கொஸ்கம முதல் அவிசாவளை வரையான ரயில் பாதை மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து கொஸ்கம வரை மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.