அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் ஹஷாந்த குணதிலக்க விடுதலை

by Bella Dalima 07-10-2022 | 6:39 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரான ஹஷாந்த குணதிலக்க, தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளரான ஹஷந்த குணதிலக்க, பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான கல்வேவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்களில் ஹஷந்த குணதிலக்கவை தங்காலை நீதவான் ஹேமந்த புஷ்பகுமார முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவு மன்றுக்கு அறிவித்துள்ளது.

இதனால் அவரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைப்பதற்கான தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேகநபரான ஹஷாந்த குணதிலக்க கைது செய்யப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசியை ஒப்படைத்து, அவரை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.