தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் வழங்கப்படும்: பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் வழங்கப்படும்: பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் வழங்கப்படும்: பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2022 | 6:22 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக 15,000 ரூபா வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு தாம் அனுமதித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

உரிய நேரத்தில் அவர்களுக்கு 15,000 ரூபா முற்பணம் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

JEDB எனப்படும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இம்முறை 10,000 ரூபா தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் உப தலைவர் பராக்கிரம செனவிரத்ன தெரிவித்தார்.

இதனிடையே, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்