.webp)
Thailand: தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு நிலைத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர்.
தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார்.
இதன்போது, அங்கிருந்த 22 குழந்தைகள் உட்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக பிடிக்க தாய்லாந்து பிரதமர் ஆணை வழங்கியுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.