கிம்புலா எல குணாவின் நெருங்கிய உறவினர் கைது

கிம்புலா எல குணாவின் நெருங்கிய உறவினர் கைது

by Staff Writer 06-10-2022 | 9:32 AM

Colombo (News 1st) வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கிம்புலா எல குணா என்றழைக்கப்படும் சின்னையா குணசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் - பதுள்ளவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 76 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்