தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2022 | 7:29 pm

Colombo (News 1st) யாழ் – தெல்லிப்பளை, அம்பனை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த 34 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அம்பனையிலுள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற வேளையிலேயே இளைஞர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.  

இன்று காலை முதல் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்