ஜனாதிபதி இன்று(06) பாராளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி இன்று(06) பாராளுமன்றத்தில் விசேட உரை

by Staff Writer 06-10-2022 | 8:00 AM

Colombo (News 1st) 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(06) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு அண்மையில் கூடிய போது 22ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(06) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இதனிடையே, கோப்(COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான புதிய தலைவரும் இன்று(06) தெரிவு செய்யப்படவுள்ளார்.