ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2022 | 5:51 pm

Colombo (News 1st) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்க்கப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன. 20 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா, பிரித்தானியா, உக்ரைன், கொரியா, ஆர்ஜன்டீனா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மன், மெக்சிக்கோ உள்ளிட்ட 20 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

சீனா, பாகிஸ்தான், கியூபா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான், வெனிசுவேலா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக (பிரேரணைக்கு எதிராக) வாக்களித்துள்ளன.

இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, மலேஷியா, நேபாளம், கட்டார், சோமாலியா, சூடான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை இந்த பிரேரணையை நிராகரிப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களை சேகரிப்பது தொடர்பிலான வௌிக்கள பொறிமுறையொன்று இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதால், தாம் இந்த பிரேரணையை நிராகரிப்பதாக வௌிவிவகார அமைச்சர் இதன்போது கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்