2022 வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

2022 வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

2022 வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2022 | 5:49 pm

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் K. Barry Sharpless, Carolyn R. Bertozzi, டென்மார்க்கின்  Morten Meldal ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்விற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி Barry Sharpless கடந்த 2001 ஆம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாளை (06) அறிவிக்கப்படவுள்ளது. 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (07) அறிவிக்கப்படவுள்ளது.

 

BREAKING NEWS:
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2022 #NobelPrize in Chemistry to Carolyn R. Bertozzi, Morten Meldal and K. Barry Sharpless “for the development of click chemistry and bioorthogonal chemistry.” pic.twitter.com/5tu6aOedy4

— The Nobel Prize (@NobelPrize) October 5, 2022

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்