லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்

by Chandrasekaram Chandravadani 05-10-2022 | 11:25 AM

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 271 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 

5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 107 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 

புதிய விலைகள் வருமாறு: 

⭕ 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் - 4,280 ரூபா
⭕ 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் - 1,720 ரூபா
⭕ 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் - 800 ரூபா