இந்தோனேசிய கால்பந்து மைதான கலவரம்; இருவருக்கு தடை

இந்தோனேசிய கால்பந்து மைதான கலவரம்; இருவருக்கு வாழ்நாள் தடை

by Staff Writer 05-10-2022 | 4:46 PM

Indonesia: இந்தோனேசியாவின் மலாங் (Malang) பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது. 

இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாகவும், 320-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக Arema கால்பந்து கழக அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

மேலும், ஒரு இந்தோனேசிய காவல்துறை தலைவர் மற்றும் 9 உயர்மட்ட அதிகாரிகள் திங்களன்று தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அத்துடன், கால்பந்து மைதானத்திற்குள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியமை தொடர்பில் 18 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த கால்பந்து சங்கத்திற்கு S$23,566 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.