மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஆறாம் அத்தியாயம் இன்று(05) ஆரம்பம்

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஆறாம் அத்தியாயம் இன்று(05) ஆரம்பம்

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஆறாம் அத்தியாயம் இன்று(05) ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2022 | 7:29 am

Colombo (News 1st) மக்களின் பிரச்சினைகளை தேடி ஆராயும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஆறாம் கட்டம் இன்று(05) ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் செயற்பாடுகள் இன்று(05) முன்னெடுக்கப்படவுள்ளன.

பேராதனை பல்கலைக்கழகமும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

தற்போது நாட்டின் அனைவராலும் அறியப்பட்டுள்ள மக்கள் சக்தி செயற்றிட்டமானது, நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரணாக திகழ்கின்றது.

மக்களுக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் சக்தி திட்டமானது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதையே இலக்காக கொண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்