நாட்டில் இதுவரை 3500 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை 3500 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை 3500 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2022 | 8:07 pm

Colombo (News 1st) நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3500 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 77 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்த வருடத்திலேயே அதிகளவிலான எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதி அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பிரதேசமாகும்.  இதுவரையான காலப்பகுதியில் பதுளையில் 40 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  எல்லவில் மாத்திரம் 25 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள், HIV தடுப்பு பிரிவு குறிப்பிட்டது. 

தற்போது  அடையாளம் காணப்படும் எயிட்ஸ் நோயாளர்களுக்கு வெலிசர கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பதுளை மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள், HIV தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்