தேசிய சபையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்; வெற்றிடத்திற்கு மருதபாண்டி இராமேஸ்வரன் நியமனம்

தேசிய சபையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்; வெற்றிடத்திற்கு மருதபாண்டி இராமேஸ்வரன் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2022 | 10:52 am

Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தேசிய சபையிலிருந்து விலகியுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் பதவி விலகலால் ஏற்பட்டுள்ள வெற்றிட்டத்திற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(05) காலை பாராளுமன்ற சமை அமர்வின் போது இதனை அறிவித்துள்ளார்.

இதனிடையே, அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக கோபா குழு இன்று(05) கூடுகின்றது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்