தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியைகள் இன்று(05)

தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியைகள் இன்று(05)

by Staff Writer 05-10-2022 | 2:29 PM

Colombo (News 1st) காலஞ்சென்ற நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியைகள் இன்று(05)  முன்னெடுக்கப்படவுள்ளன.

அன்னாரின் சொந்த ஊரான இறக்குவானையில் இன்று(05) மாலை இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் மாலை அன்னாரின் பூதவுடல் இறக்குவானைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்றும் இன்றும் பெருந்திரளானவர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னார் தமது 41ஆவது வயதில் கடந்த 02ஆம் திகதி காலை மாரடைப்பால் உயிரிழந்தார்..