.webp)
Colombo (News 1st) இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் சந்தையில் தொலைபேசி உதிரிப் பாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தொலைபேசி வர்த்தக நிறுவன உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.
இதனால் நுகர்வோரும் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில தொலைபேசி உதிரிப் பாகங்களின் விலைகள் 30% முதல் 60% வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தொலைபேசி வர்த்தக நிறுவன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், தொலைபேசி உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடும் சந்தையில் நிலவுகின்றது.
தொலைபேசி உதிரிப் பாகங்கள் மற்றும் தொலைபேசி விலை அதிகரிகரித்துள்ளதால், விற்பனை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை வௌியிட்டனர்.