எரிவாயு விலை 200 - 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது

எரிவாயு சிலிண்டரின் விலை 200 - 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது - லிட்ரோ

by Staff Writer 04-10-2022 | 12:43 PM

Colombo (News 1st) வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விலை நாளை(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய விலைகள் நாளை(05) காலை அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.